search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிசோரம் சட்டசபை தேர்தல்"

    மிசோரம் மாநில முதல்வராக பதவியேற்ற சோரம் தங்காவிற்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #MizoNationalFront #Zoramthanga #MizoramCM #Modi #Greeting
    ஐசால்:

    மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 40 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் பணிகளைத் தொடங்கியது.



    இதையடுத்து மாநில ஆளுநரைச் சந்தித்த சோரம்தங்கா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்ற ஆளுநர், ஆட்சியமைக்க வரும்படி சோரம்தங்காவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று மதியம் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சோரம்தங்கா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கும்மண்ணம் ராஜசேகரன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    சோரம் தங்காவை தொடர்ந்து 11 மந்திரிகளும் பதவியேற்றனர். இதில் ஒருவரான தன்லுயாவுக்கு துணை முதல்-மந்திரி பொறுப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

    மிசோரமில் 3-வது முறையாக முதல்-மந்திரியாகி இருக்கும் சோரம் தங்கா, ஏற்கனவே 1998 மற்றும் 2003–ம் ஆண்டுகளிலும் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர்.

    இந்நிலையில், மிசோரம் முதல்-மந்திரியாக பதவியேற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம் தாங்காவிற்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    "மிசோரம் முதல்-மந்திரி சோரம் தாங்காவிற்கு வாழ்த்துகள். அவரது பதவிக் காலங்களில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய வாழ்த்துகள். மக்களின் தேவையை அறிந்து நாட்டின் வளர்ச்சியை நோக்கி செயல்படுவோம்" இவ்வாறு பதிவிட்டுள்ளார். #MizoNationalFront #Zoramthanga #MizoramCM #Modi #Greeting 
    மிசோரம் மாநில முதல்வராக மிசோ தேசிய முன்னணி தலைவர் சோரம்தங்கா இன்று பதவியேற்றார். #MizoNationalFront #Zoramthanga #MizoramCM
    ஐசால்:

    மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 40 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் பணிகளைத் தொடங்கியது.

    முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காக கட்சியின் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் தலைநகர் ஐசாலில் நடைபெற்றது. இதில், கட்சியின் தலைவர் சோரம்தங்கா, சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கவும் முடிவு செய்யப்பட்டது.



    இதையடுத்து மாநில ஆளுநரைச் சந்தித்த சோரம்தங்கா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்ற ஆளுநர், ஆட்சியமைக்க வரும்படி சோரம்தங்காவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று மதியம் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சோரம்தங்கா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கும்மண்ணம் ராஜசேகரன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். #MizoNationalFront #Zoramthanga #MizoramCM
    மிசோரம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. #MizoramAssemblyElections
    ஐஸ்வால்:

    மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது.

    40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். 
     
    கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. அதன்பின்னர் வாக்காளர்கள் வருகை படிப்படியாக அதிகரித்தது. தலைநகர் ஐஸ்வால் உள்ளிட்ட இடங்களில் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.



    மிசோரம் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சி.எல்.ருவாலா, ஐஸ்வால் தெற்கு-2 வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். முன்னாள் முதல் மந்திரியும் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி தலைவருமான ஜோரம்தங்கா காலை 7 மணிக்கே ஐஸ்வால் வடக்கு-2 தொகுதிக்கு உட்பட்ட ராம்லன் வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார். 

    இந்நிலையில், மாலை 5 மணியுடன் அங்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.  இன்றைய தேர்தலில் சுமார் 71 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் அதிகாரி ஆஷிஷ் குந்த்ரா தெரிவித்துள்ளார். #MizoramAssemblyElections
    மத்தியபிரதேசம், மிசோரம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. வரும் 28-ம் தேதி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. #Campaigningends #MPpolls #Mizorampolls
    போபால்:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை, தலைமை தேர்தல் ஆணையம் தற்போது நடத்தி வருகிறது.

    முதலில் சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு கடந்த 12 மற்றும் 20-ந்தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. அம்மாநிலத்தில் சராசரியாக 73 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    அடுத்தகட்டமாக மத்தியபிரதேசம், மிசோரம் மாநிலங்களில் நாளை மறுநாள் (புதன்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியபிரதேசம் மாநிலத்தில் 230 தொகுதிகள் உள்ளன. மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகள் இருக்கின்றன.

    இந்த இரு மாநிலங்களிலும் வரும் 28-ந்தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்ற கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்தது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் இரு மாநிலங்களிலும் முற்றுகையிட்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள்.

    கடந்த ஒரு வாரமாக மத்திய பிரதேசத்திலும், மிசோரமிலும் உச்சக்கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியுடன் இரு மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. 28-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறும்.

    வாக்குப்பதிவை சுமுகமாகவும், நியாயமாகவும் நடத்தி முடிக்க இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமானவை கண்டறியப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் துணைநிலை ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட உள்ளனர்.

    இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாக்கப்படும்.

    ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் வரும் 7-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிந்ததும் 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 11-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். #Campaigningends #MPpolls #Mizorampolls
    வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் எதையும் செய்யவில்லை என்று மிசோரம் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். #pmmodi #congress #Mizoramassemblyelection
    லுங்லெய்(மிசோரம்)

    40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் மாநில சட்டசபைக்கு வருகிற 28-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் மிசோரமில், பா.ஜனதா 39 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இன்னொரு பிரதான கட்சியான சோரம் மக்கள் இயக்கம் அதன் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரி சோரம்தங்கா தலைமையில் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மிசோ தேசிய முன்னணி என்ற பெயரில் களம் காண்கிறது.

    தேர்தலையொட்டி தலைவர்கள் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா ஆகியோர் பிரசாரத்தை முடித்து விட்டனர். இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று மிசோரம் சென்றார்.

    அங்குள்ள லுங்லெய் நகரில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேசும்போது “நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் தொடர்ந்து கையாண்டு வருகிறது. தற்போது அதை மக்கள் புரிந்து கொண்டுவிட்டனர். அதனால்தான் ஒரு காலத்தில் அதிக மாநிலங்களை ஆண்ட காங்கிரஸ் இன்று 2, 3 மாநிலங்களை மட்டும் ஆளும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. தற்போது மிசோரம் மக்களுக்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. நீங்களும் இங்கிருந்து காங்கிரசை விரட்டி அடியுங்கள்” என்றார்.

    காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசிதரூர் கடந்த ஆகஸ்டு மாதம், ஒரு நிகழ்ச்சியில் வடகிழக்கு மாநில மக்கள் அணியும் தொப்பியை பிரதமர் மோடி அணிந்திருந்ததை கேலி செய்யும் விதமாக பேசியிருந்தார்.

    இதை தேர்தல் பிரசாரத்தில் சுட்டிக் காட்டிய மோடி, “பொதுவாகவே வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரத்தை கிண்டல் செய்யும் போக்கு காங்கிரசிடம் உண்டு. இது வேதனையளிக்கும் விஷயம். அக்கட்சியின் ஒரு தலைவர் வடகிழக்கு மாநில மக்கள் அணியும் தொப்பி குறித்து தவறாக பேசினார். அவர்களை வெளியில் இருந்து வந்தவர்கள் என்றார். உங்களுடைய நம்பிக்கைகள், லட்சியங்கள் எல்லாம் காங்கிரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக காங்கிரஸ் இங்கே போட்டியிடவில்லை. அதிகாரத்தை கைப்பற்றவே மோதுகிறது” என்று கடுமையாக சாடினார்.

    மேலும், “கடந்த 4½ ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா வடகிழக்கு மாநில மக்களின் கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் பரந்த, விரிந்த நோக்குடன் செயல்பட்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கோ, கலாசாரத்துக்கோ எதையும் செய்யவில்லை“ என்று குற்றம் சாட்டினார். #pmmodi #congress #Mizoramassemblyelection
    மிசோரம் மாநில சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ளது. #MizoramElections #Congresscandidates #candidateslist
    ஐஸ்வால்:

    40 இடங்களை கொண்ட மிசோரம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், இங்குள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.

    முதல் மந்திரி லால் தன்ஹாவாலா ஹச்செக்(தனி) தொகுதியில் இந்த தேர்தலை சந்திக்கிறார்.

    கடந்த 2013-ம் ஆண்டு இங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 34 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மிசோ தேசிய முன்னணி 4 இடங்களையும், மிசோரம் மக்கள் மாநாட்டு கட்சி ஒரு இடத்தையும் பிடித்திருந்தது நினைவிருக்கலாம். #MizoramElections #Congresscandidates #candidateslist
    மிசோரம் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. #Mizoramassemblyelection #congress

    கவுகாத்தி:

    மிசோரம் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 28-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 40 தொகுதிகளை கொண்ட அம்மாநில சட்டசபைக்கு ஒரேகட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்படுகிறது.

    மிசோரமில் ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக தேர்தல் பணிகளை முன்னதாகவே காங்கிரஸ் தொடங்கி விட்டது.

    வேட்பாளர்கள் தேர்வில் எந்தவித குழப்பமும் வந்து விடக்கூடாது என்பதற்காக வேட்பாளர் பட்டியலையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 36 தொகுதிகளுக்கு காங்கிரஸ் நேற்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    அந்த 36 வேட்பாளர்களில் 12 வேட்பாளர்கள் தேர்தல் களத்துக்கு முதன் முதலாக வரும் புதுமுக வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதுமுகங்களில் சுமார் 40 சதவீதம் பேர் இளைஞர்கள் ஆவார்கள்.

    மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

    ஓரிரு நாட்களில் அந்த 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

    மிசோரமில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்களில் 8 பேருக்கு காங்கிரஸ் மேலிடம் மீண்டும் போட்டியிட சீட் கொடுக்க வில்லை. அவர்களில் அமைச்சர் ரோமலியா, துணை சபாநாயகர் லல்ரின்மாலியா ஆகியோர் முக்கியமானவர்கள். #Mizoramassemblyelection #congress

    ×